ETR.FM

3 சட்டமூலங்களை முழுமையாக மீளப்பெறக் கோரி கூட்டுப் பிரகடனம்!

20.11.2026 09:45 1 நிமிட வாசிப்பு

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

சட்டமூலங்கள் மீளப்பெறப்படாவிட்டால் பரந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததுள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வியாழக்கிழமை (19) 'அரச பயங்கரவாத சட்டங்களை கிழித்தெறிவோம்!' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்விலேயே இக்கூட்டு பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், முன்னிலை சோசலிசக் கட்சி, மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு, ஒருங்கிணைந்த ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்