ETR.FM

ஆரவாரத்துடன் வெளியானது தனுஷின் ஓம்.

20.11.2026 09:08 1 நிமிட வாசிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் அமரன் பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள  'ஓம் திரைப்படம் இன்று  உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு வலுவான வெற்றியை எதிர்நோக்கியிருந்த தனுஷுக்கு, இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போய் இன்று திரைக்கு வந்துள்ளது. குறிப்பாக, தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ள சூழலில் இப்படம் வெளியாகியிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேனர்கள் வைத்தும் படத்தின் வெளியீட்டைத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்  ஓம் திரைப்படத்திற்கு நேர்மறையான வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்களின் விமர்சனங்களில்  சிலவற்றை இங்கே காண்போம்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்